திரவுபதி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
திருவள்ளூர் மாவட்டம் மேல் திருத்தணி பகுதியில் அமைந்துள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீ மிதி திருவிழா ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம்.
திருவள்ளூர்
கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகளாக தீ மிதி திருவிழா நடைபெறவில்லை. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான தீ மிதி திருவிழா கடந்த மே மாதம் 19-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலையில் மூலவர் அம்மனுக்கு சந்தன காப்பு மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்து வந்தது.
நேற்று காலை, 9 மணிக்கு கோவில் வளாகத்தில் துரியோதனன் படுகள நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தீமிதி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story