திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்


திருச்செந்தூர் வெயிலுகந்த அம்மன் கோவிலில் ஆவணித் திருவிழா கொடியேற்றம்
x

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிளான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர்,

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலின் உபகோவிளான வெயிலுகந்த அம்மன் கோவில் ஆவணித் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இத்திருவிழா வருகிற 15-ந் தேதி வரை நடக்கிறது. கொடியேற்றத்தை முன்னிட்டு இன்று கோவில் நடை அதிகாலை திறக்கப்பட்டு, அம்மனுக்கு அபிஷேகம், அலங்கமாகி தீபாராதனை நடந்தது.

கோவிலிருந்து கொடிப்பட்டம் பல்லக்கில் புறப்பட்டு, வீதி உலா வந்து மீண்டும் கோவிலை சேர்ந்தது. பின்னர் 11 கும்பங்கள் வைக்கப்பட்டு பூஜைகள் நடந்தது. காலை 5.15 மணிக்கு குட்டி ராஜா வல்லவராயர் கொடியேற்றினார்.

மகா தீபாராதனை

தொடர்ந்து கொடிமர பீடத்திற்கு பல்வேறு திரவியங்களால் அபிஷேகம் நடந்தது. பின்னர் கொடிமர பீடம் தர்பை புல்லாலும், வண்ண மலர்களாலும், பட்டாடைகளாலும் அலங்கரிக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில், கோவில் இணை ஆணையர் கார்த்திக், தக்கார் பிரதிநிதியும் ஓய்வு பெற்ற கால்நடை துறை உதவி இயக்குனருமான பாலசுப்பிரமணிய ஆதித்தன், மணியம் நெல்லையப்பன் உள்பட பலர் கலந்து கொண்டர்.

தேரோட்டம்

திருவிழா காலங்களில் தினசரி காலையும், மாலையும் அம்மன் வெவ்வேறு வாகனத்தில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார். அதேபோல் திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 15-ந் தேதி(திங்கள் கிழமை) காலையில் நடக்கிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், இணை ஆணையர் கார்த்திக் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


Next Story