பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்- யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்


பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1000 ரொக்கம்- யாருக்கெல்லாம் கிடைக்கும்? முழு விவரம்
x

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு ஆகியவையுடன் ரூ.1000 ரொக்கமும் பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்படுகிறது.

சென்னை,

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை தமிழக மக்கள் சிறப்பாக கொண்டாடும் வகையில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 ரொக்கமாக வழங்கப்படும் என்று முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும், பொங்கல் திருநாளை முன்னிட்டு ஒவ்வொரு மாதமும் 15 ஆம் தேதி வழங்கப்பட்டு வரும் கலைஞர் மகளிர் உரிமைத் தொகையினை, இந்த மாதம் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக, அதாவது, வரும் 10 ஆம் தேதி வரவுவைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். பொங்கல் பரிசுத்தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும் என்பது குறித்தும் தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

" பொங்கல் திருநாளைச் சிறப்பாக மக்கள் கொண்டாடிட, மத்திய , மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர், பொதுத் துறை நிறுவனங்களில் பணிபுரிவோர், சர்க்கரை அட்டைதாரர்கள், பொருளில்லா அட்டைதாரர்கள் தவிர்த்து, ஏனைய குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் 1,000 ரூபாய் பொங்கல் பரிசாக நியாயவிலைக் கடைகளில் பொங்கல் திருநாளுக்கு முன்னதாக ரொக்கமாக வழங்கப்படும் என்று மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார் " எனக்கூறப்பட்டுள்ளது.


Next Story