டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமன பரிந்துரை விவகாரம்: கவர்னருக்கு வைகோ கண்டனம்
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்ததற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.
சென்னை,
டி.என்.பி.எஸ்.சி. தலைவராக சைலேந்திர பாபு நியமன பரிந்துரையை கவர்னர் நிராகரித்துள்ளார். இந்த நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியிருப்பதாவது;
"தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு வாரியத்தின் தலைவராக முன்னாள் டி.ஜி.பி. சைலேந்திர பாபுவை நியமிக்குமாறு தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்திருந்தது.
சைலேந்திர பாபுவிற்கு அந்தத் தகுதி இல்லை என தமிழ்நாடு அரசின் பரிந்துரையை ஆளுநர் ஆர்.என்.ரவி நிராகரித்திருப்பது, அவரது அதிகார எல்லையை மீறிய சர்வதிகார முடிவாகும்.
தமிழக அரசு செய்கின்ற பரிந்துரைகளை எல்லாம் நிராகரிக்கும் ஆளுநர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அல்ல. பாஜக அரசின் ஏஜெண்டாகச் செயல்படுகின்ற தமிழக ஆளுநருக்கு கடும் கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்." இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story