சுற்றுச்சூழலை பாதுகாக்க சுருளி அருவி பகுதியில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு


சுற்றுச்சூழலை பாதுகாக்க சுருளி அருவி பகுதியில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுமா? சுற்றுலா பயணிகள் எதிர்பார்ப்பு
x
தினத்தந்தி 2 April 2023 6:45 PM GMT (Updated: 2 April 2023 6:45 PM GMT)

சுற்றுச்சூழலை பாதுக்காக சுருளி அருவி பகுதியில் விழிப்புணர்வு ஓவியங்கள் வரையப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.

தேனி

கம்பம் அருகே சுருளி அருவி அமைந்துள்ளது. இந்த அருவி சிறந்த சுற்றுலா, புண்ணிய தலமாக விளங்குகிறது. இந்த அருவிக்கு ஹைவேவிஸ் மலைப்பகுதியில் உள்ள தூவானம் அணையில் இருந்து நீர்வரத்து எற்படும். இங்கு தேனி மட்டுமின்றி வெளி மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

சுருளி அருவி ஸ்ரீவில்லிபுத்தூர் மேகமலை புலிகள் சரணாலயத்திற்குள் வருவதால், அருவி பகுதிக்கு வாகனங்களில் செல்ல அனுமதியில்லை. இதனால் சுமார் 1 கி.மீ. தூரத்திற்கு வெளியே வாகனங்களை நிறுத்தி விட்டு அருவிக்கு நடந்து செல்ல வேண்டும். இந்த வனப்பகுதி வழியாக நடந்து செல்லும் போது சாலையின் இருபுறமும் இயற்கை காட்சிகள், பறவைகளின்கீச்சிடும் சத்தங்களும் மகிழ்ச்சியை தருகின்றன.

மேலும் சுற்றுலா பயணிகளுக்கு உடை மாற்றும் அறை, கழிப்பறை ஆகியவை வனத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ளன. ஆனால் இந்த கட்டிட சுவற்றில் சுற்றுலா வரும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் ஏதாவது எழுதிவிட்டு செல்கின்றனர். இது சுற்றுலா பயணிகள் முகம் சுழிக்கும் வகையில் அமைகிறது. இதனை தடுக்க சுவர்களில் சுற்றுப்புற சூழல், வனவிலங்குகள் பாதுகாப்பு குறித்து ஓவியங்கள் வரையப்படுமா என்ற எதிர்பார்ப்பில் சுற்றுலா பயணிகள் உள்ளனர்.


Related Tags :
Next Story