முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி 5 மாவட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்


முல்லைப்பெரியாறு அணை நீர்மட்டத்தை உயர்த்தக்கோரி  5 மாவட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும்:  விவசாயிகள் வலியுறுத்தல்
x

முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்தக்கோரி 5 மாவட்ட கிராம சபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

தேனி

முல்லைப்பெரியாறு அணையை இடித்து விட்டு புதிய அணை கட்ட வேண்டும் என்று கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம், தொடுபுழா அருகே உள்ள வெள்ளியமட்டம் என்ற ஊராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதுகுறித்து கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகள் கூறியதாவது, இதனை கண்டித்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும். முல்லைப்பெரியாறு அணையை காக்கும் வகையில் அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்த வேண்டும். பேபி அணையை பலப்படுத்த வேண்டும். ரூல் கர்வ் விதியை ரத்து செய்ய வேண்டும் என்பது உள்பட தீர்மானங்களை கிராம சபை கூட்டத்தில் நிறைவேற்ற வேண்டும் என்றனர்.


Related Tags :
Next Story