இன்றைய தங்கம் விலை நிலவரம்: 2 வது நாளாக சவரனுக்கு ரூ.544 குறைந்தது


இன்றைய தங்கம் விலை நிலவரம்: 2 வது நாளாக சவரனுக்கு ரூ.544 குறைந்தது
x

கோப்புப்படம்

சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த கடந்த 1ஆம் தேதியிலிருந்து ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகமாகவே இருந்து வந்தது. இந்நிலையில் சென்னையில் நேற்று காலை தங்கம் விலை கிராம் ஒன்றுக்கு 65 ரூபாயும், சவரனுக்கு 520 ரூபாயும் அதிரடியாக குறைந்திருந்தது.

இந்நிலையில் தொடர்ந்து 2வது நாளாக இன்றும் தங்கம் விலை குறைந்துள்ளது. இதன்படி சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த 2 நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,064 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,740க்கும், சவரன் ரூ.37,920க்கும் விற்கப்பட்டது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22காரட் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.68 குறைந்து, ரூ4,672 ஆகவும், சவரனுக்கு ரூ.544 குறைந்து ரூ.37,376க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு 10 காசுகள் குறைந்து ரூ.62.40க்கு விற்பனையாகிறது.


Next Story