சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து பெண் பலி: `கடவுளின் செயல் என ஏற்க முடியாது' - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு


சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து பெண் பலி: `கடவுளின் செயல் என ஏற்க முடியாது - ஐகோர்ட்டு மதுரை கிளை அதிரடி உத்தரவு
x

சுங்கச்சாவடி அறிவிப்பு பலகை விழுந்து பெண் உயிரிழந்தது கடவுளின் செயல் என ஏற்க முடியாது என்று ஐகோர்ட்டு மதுரை கிளை தெரிவித்துள்ளது.

மதுரை,

திருச்சி-திண்டுக்கல் சாலையில் பொன்னம்பலப்பட்டி அருகே சுங்கச்சாவடி அமைந்துள்ளது. இங்கு கடந்த 2018-ம் ஆண்டு அறிவிப்பு பலகை விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வழக்கு ஐகோர்ட்டு மதுரைக் கிளையில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் ஐகோர்ட்டில் இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்துள்ளது. அப்போது தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர், காற்று அடித்ததால் பலகை விழுந்தது. இது கடவுளின் செயல் என வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, இது கடவுளின் செயல் என்று ஏற்க முடியாது. உயிரிழந்த பெண்ணின் குடும்பத்துக்கு இழப்பீடாக ரூ. 5 லட்சத்தை, விபத்து நடந்த நாளில் இருந்து தற்போது வரை 6 சதவீத வட்டியுடன் சேர்த்து கணக்கிட்டு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர்.


Next Story