கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு


கோயம்பேடு காய்கறி சந்தையில் தக்காளி விலை தொடர்ந்து உயர்வு
x

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது.

சென்னை,

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் வரத்து குறைவால் தக்காளி விலை அதிகரித்துள்ளது. நாட்டுத்தக்காளி 80 ரூபாய்க்கும், நவீன் தக்காளி 85 ரூபாய்க்கும் சில்லறை வர்த்தகத்தில் 100 முதல் 110 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.

வழக்கமாக 70 லாரிகள் வரும் நிலையில், தற்போது 40 லாரிகள் மட்டுமே வருவதாகவும், விவசாயிகள் தக்காளி சாகுபடியை அதிகம் மேற்கொள்ளாததால், வரத்து குறைந்து விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

அதேபோல அவரை, பீன்ஸ் விலையும் இரு மடங்கு உயர்ந்துள்ளது. உருளை ரூ.30, சின்ன வெங்காயம் ரூ.43 ஊட்டி கேரட் ரூ.25, வெண்டைக்காய் ரூ.40, முருங்கைக்காய் ரூ.70, எலுமிச்சை 140 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.



Next Story