கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு...!


கோயம்பேடு சந்தையில் தக்காளி விலை மீண்டும் உயர்வு...!
x
தினத்தந்தி 30 July 2023 7:10 AM IST (Updated: 30 July 2023 11:04 AM IST)
t-max-icont-min-icon

கோயம்பேட்டில் தக்காளி விலை மேலும் உயர்ந்துள்ளது.

சென்னை,

தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் தக்காளி விலை அதிகபட்சமாக ரூ.150 வரை சென்றது. வெளி மார்க்கெட்டில் ரூ.180 வரை விற்கப்பட்டது.

ஆனால், கடந்த வாரம் ஓரளவு விலை குறைந்து வந்தது. அதன்படி, கடந்த 24-ந்தேதி சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது.

அதன் பின்னர், மீண்டும் விலை உயர தொடங்கியது. கோயம்பேடு சந்தையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.10 உயர்ந்து ரூ.150க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இன்று தக்காளி விலை கிலோவுக்கு ரூ. 10 உயர்ந்து ரூ.160க்கு விற்பனை செய்யப்படுகிறது. தக்காளி விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.


Next Story