தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை


தூத்துக்குடி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை
x
தினத்தந்தி 19 Dec 2023 3:05 PM GMT (Updated: 19 Dec 2023 3:25 PM GMT)

இவ்விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற சனிக்கிழமை வேலை நாளாக அனுசரிக்கப்படும்.

தூத்துக்குடி,

தென்மாவட்டங்களான நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய நான்கு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல பகுதிகள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

பல்வேறு இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால், சாலைகள்துண்டிக்கப்பட்டுள்ளன. பாலங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளன. பொதுமக்கள் பலர் வெள்ளத்தில் உடமைகளை இணைந்துள்ளனர். இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏரல் பகுதி வெள்ளத்தால் முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியிலுள்ள பெரும்பாலான மக்கள், கடந்த 3 நாள்களாக உணவு, குடிநீர் இன்றி தவிப்பதாக மீட்புக் குழுவுக்கு தகவல் கிடைத்துள்ளது.

இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ததால் மாவட்டத்தின் பல பகுதிகளில் வெள்ள நீர் வடியாமல் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதால் பள்ளிகள்,கல்லூரிகள், தனியார் நிறுவனங்கள், மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு நாளை 20.12.2023 (புதன்கிழமை) ஒரு நாள் மட்டும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது.

இவ்விடுமுறை நாளை ஈடுசெய்ய வருகிற சனிக்கிழமை வேலை நாளாக அனுசரிக்கப்படும். அத்தியாவசிய சேவைகள் வழங்கும் துறையான வருவாய்த்துறை, காவல்துறை. தீயணைப்பு உள்ளாட்சி துறை, பால், குடிதண்ணீர், எரிபொருள் உணவக பணியாளர்கள் மற்றும் வெள்ள நிவாரண பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கும் உள்ளுர் விடுமுறை பொருந்தாது என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. பள்ளி, கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.


Next Story