வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்


வார விடுமுறையையொட்டி கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்
x

வார இறுதி விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது.

திண்டுக்கல்,

'மலைகளின் இளவரசி' என்று அழைக்கப்படும் கொடைக்கானலுக்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர்.

இந்த நிலையில் இன்று வார இறுதி விடுமுறை தினம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்து காணப்பட்டது. கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக காற்றுடன் கூடிய குளுமையான சூழல் நிலவி வருகிறது. இதையொட்டி தினமும் பல்வேறு ஊர்களில் இருந்து சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

கொடைக்கானல் வந்த சுற்றுலா பயணிகள் அங்குள்ள பில்லர் ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பிரையண்ட் பூங்கா உள்ளிட்ட இடங்களை கண்டு ரசித்தனர். மேலும் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரியை சுற்றி சைக்கிள் சவாரி செய்து மகிழ்ந்தனர்.




Next Story