விபத்தில் வியாபாரி பலி


விபத்தில் வியாபாரி பலி
x

கடையம் அருகே விபத்தில் வியாபாரி பலியானார்.

தென்காசி

கடையம்:

தென்காசி கீழப்புலியூர் உச்சி மாகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த செல்லப்பாண்டி மகன் துரை (வயது 49). இவர் வியாபாரத்திற்காக தனது மோட்டார்சைக்கிளில் பாபநாசம் சென்று அங்குள்ள சித்த வைத்திய சாலையில் மருந்து வேர் வாங்கிக் கொண்டு ஊருக்கு புறப்பட்டார்.

கடையம் மாட்டுச்சந்தை அருகே வந்தபோது முன்னால் சென்ற லாரி திடீரென நிறுத்தியதால் லாரியை முந்திச் சென்றுள்ளார். அப்போது எதிரே வந்த கார்-மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது. இதில் துரை படுகாயமடைந்தார். தகவல் அறிந்த கடையம் போலீசார் துரையை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள், துரை இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுதொடர்பாக கார் டிரைவர் காயல்பட்டினத்தை சேர்ந்த லிங்கன் மகன் சதீஷ்குமாரை என்பவரை போலீசார் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story