வியாபாரிகள் நூதன போராட்டம்


வியாபாரிகள் நூதன போராட்டம்
x
தினத்தந்தி 12 April 2023 6:45 PM GMT (Updated: 12 April 2023 6:45 PM GMT)

கோவில்பட்டியில் வியாபாரிகள் நூதன போராட்டம் நடத்தினர்.

தூத்துக்குடி

கோவில்பட்டி:

கோவில்பட்டி நகராட்சி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் தினசரி சந்தையில் உள்ள கடைகளை இடித்து விட்டு, புதிதாக கடைகளை கட்டுவதற்கு நகரசபை நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இதற்கு வியாபாரிகள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

தினசரி சந்தையில் உள்ள கடைகள், கடைக்காரர்களால் பராமரிப்பு செய்யப்பட்டு நல்ல நிலையில் உள்ளதாகவும், கடைகளை இடித்து புதிதாக கடை கட்ட ஒதுக்கிய நிதியில் கோவில்பட்டி நகரில் வேறு இடத்தில் தினசரிச் சந்தையை கட்டினால் நகரசபைக்கு இரட்டிப்பு வருமானம் கிடைக்கும், மேலும் 250 வியாபாரிகள் வியாபாரம் செய்வார்கள் என்று வியாபாரிகள் கோரிக்கை விடுத்து வருகிறார்கள். இதையொட்டி நேற்று தினசரி சந்தை கடைகளில் கருப்பு துணிகளை கட்டி, வியாபாரிகள் வாயில் கருப்பு துணியை கட்டி மவுன போராட்டம் நடத்தினார்கள்.


Next Story