பாரம்பரிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாரம்பரிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே திருபுவனம் மந்த்ரா கூடத்தில் பழங்கால பாரம்பரிய உணவுகள் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. பாரம்பரிய உணவு விழிப்புணர்வு நிகழ்ச்சியை ராமலிங்கம் எம்.பி. குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். மந்த்ரா கூடம் பொது மேலாளர் ஹரிஷ் வெங்கடசுப்பிரமணியன் வரவேற்றார். நிகழ்ச்சிக்கு மந்த்ரா கூடம் நிர்வாக இயக்குனர் பாண்டியன் தலைமை தாங்கினார். நிகழ்ச்சியில் 45 வகையான உணவுகள் தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் வெளிநாட்டினர் உள்பட முக்கிய பிரமுகர்களும், உள்ளூர் மக்களும் கலந்துகொண்டு உணவு வகைகளை ருசி பார்த்தனர். இதில் பாரம்பரிய உணவுகள் சமையல் கலைஞர் மருதவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story