வாலிபரிடம் ெசல்போன் பறித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பணியிடைநீக்கம்


வாலிபரிடம் ெசல்போன் பறித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பணியிடைநீக்கம்
x

வாலிபரிடம் ெசல்போன் பறித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர்


வாலிபரிடம் ெசல்போன் பறித்த விவகாரத்தில் போக்குவரத்து போலீஸ்காரர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூரை அடுத்த பெருமாநல்லூரை சேர்ந்தவர் நடராஜ் (வயது 34). இவர் அவினாசி போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் இரண்டாம் நிலை காவலராக பணியாற்றி வந்தார். கடந்த 12-ந் தேதி இரவு மகாராஜா கல்லூரி அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை தடுத்து நிறுத்தி சோதனை செய்தார். தலைக்கவசம் அணியாமல் வந்ததால் அவரிடம் ரூ.500 அபராதம் விதிப்பதாக கூறினார்.

இந்தநிலையில் நடராஜின் செல்போன் தவறி கீழே விழுந்து சேதமடைந்ததாக தெரிகிறது. உடனே மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரின், செல்போனை வாங்கி, சிம்கார்டை அவரிடம் கழற்றி கொடுத்து விட்டு, 'உன்னால் தான் செல்போன் சேதமானது. ரூ.26 ஆயிரம் கொடுத்து விட்டு உனது செல்போனை வாங்கி செல்' என்று கூறியுள்ளார். இதனால் அந்த வாலிபர் அதிர்ச்சி அடைந்து பெருமாநல்லூர் போலீசில் புகார் அளித்தார். இதை அறிந்த போலீஸ்காரர் நடராஜ், அந்த வாலிபரிடம் செல்போனை திருப்பிக்கொடுத்துள்ளார்.

இருப்பினும் இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு புகார் சென்றது. இது குறித்து உயர் அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். ஒழுங்கீனமாக நடந்து கொண்ட போலீஸ்காரர் நடராஜை பணியிடை நீக்கம் செய்து போலீஸ் சூப்பிரண்டு சசாங் சாய் உத்தரவிட்டார்.

----

Reporter : M.Sivaraj_Staff Reporter Location : Tirupur - Tirupur


Related Tags :
Next Story