தலையாட்டி பொம்மை செய்முறை பயிற்சி முகாம்


தலையாட்டி பொம்மை செய்முறை பயிற்சி முகாம்
x

தலையாட்டி பொம்மை செய்முறை பயிற்சி முகாம் நடக்கிறது.

தஞ்சாவூர்

தஞ்சை மாவட்டத்தின் பெருமைகளை பறைசாற்றும் கண்காட்சி மற்றும் பயிற்சி பட்டறை தொடர்ந்து நடத்த சுற்றுலா வளர்ச்சி குழும கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதன்அடிப்படையில் உலக பாரம்பரிய தினமான இன்று (செவ்வாய்க்கிழமை) மாணவர்களுக்கான ஒரு நாள் கைவினை பயிற்சி பட்டறை நடைபெற உள்ளது. இதையொட்டி தஞ்சை அருங்காட்சியக வளாகத்தில் புவிசார் குறியீடு பெற்ற பொருட்களின் ஒன்றான தலையாட்டி பொம்மை குறித்து செய்முறை பயிற்சி முகாம் இன்று காலை 9.30 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. இன்றைய தலைமுறையினர் நமது கலைகளின் சிறப்புகளை நேரடி செயல்முறை மூலம் தெரிந்து கொள்ள செய்வது தான் இப்பயிற்சியின் நோக்கமாகும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கூறியுள்ளார்.


Next Story