கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பயிற்சி பட்டறை


கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பயிற்சி பட்டறை
x

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் பயிற்சி பட்டறை நடந்தது.

தூத்துக்குடி

திருச்செந்தூர்:

திருச்செந்தூர் கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரியில் வணிக நிர்வாகவியல் துறை சார்பில், மாணவிகளுக்கு நேர்காணல் குறித்த பயிற்சி பட்டறை நடந்தது. கல்லூரி முதல்வர் ஜெயந்தி தலைமை தாங்கினார். துறைத்தலைவர் ரேணுகா முன்னிலை வகித்தார். மாணவி சிவகாமசெல்வி வரவேற்று பேசினார்.

டாக்டர் சிவந்தி ஆதித்தனார் பொறியியல் கல்லூரி மேலாண்மை துறை பேராசிரியை நித்யா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசினார். அவர் பேசுகையில், வேலைவாய்ப்புக்கான நேர்காணலுக்கு செல்லும்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள், சுயகுறிப்பு தயாரித்தல், உடை, தோற்றம், நேரம் தவறாமை, பதிலளிக்கும் விதம் குறித்து விளக்கி கூறினார். மாணவிகளுக்காக மாதிரி நேர்காணல் நடத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் வணிக நிர்வாகவியல் துறை பேராசிரியைகள் விஜயலட்சுமி, பார்கவி, செல்லப்பிரியா மற்றும் பேராசிரியர்கள், மாணவிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிகளை மாணவி ஆஷா மணி தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை மேலாண்மை மன்ற செயலாளர் தெய்வ வீரலட்சுமி செய்து இருந்தார்.


Next Story