துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்


துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம்
x

16 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சேலம்

16 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள்

சேலம் மாவட்டத்தில் 16 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணியிட மாற்றம் செய்து கலெக்டர் கார்மேகம் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி மகுடஞ்சாவடி துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சாந்தினிதேவி, நங்கவள்ளிக்கு மாற்றம் செய்யப்பட்டு உள்ளார். நங்கவள்ளி மணிமலர் கொளத்தூருக்கும், கொளத்தூர் சித்தானந்தம் பனமரத்துப்பட்டிக்கும், வாழப்பாடி அனிதா, மகுடஞ்சாவடிக்கும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

சங்ககிரி முகம்மதுரபீக், வாழப்பாடிக்கும், தலைவாசல் விஜயகுமார், பெத்தநாயக்கன்பாளையத்திற்கும், பெத்தநாயக்கன்பாளையம் அகிலா, தலைவாசலுக்கும், மேச்சேரி செந்தில்குமார், ஓமலூருக்கும், ஓமலூர் தில்ஷாத், காடையாம்பட்டிக்கும், காடையாம்பட்டி சரவணன், மேச்சேரிக்கும், மேச்சேரி ராஜேஷ் எடப்பாடிக்கும், எடப்பாடி மோகன், ஓமலூருக்கும், கொங்கணாபுரம் சியாமளா, எடப்பாடிக்கும் இட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் உள்பட மாவட்டம் முழுவதும் 16 துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

அலுவலக உதவியாளர்கள்

பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் கேசவன், மகுடஞ்சாவடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளராக பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளார். அதேபோன்று மகுடஞ்சாவடி வெங்கடாசலம், எடப்பாடிக்கு இடமாறுதல் செய்யப்பட்டு உள்ளார். இவர்கள் உள்பட 15 உதவியாளர்கள் பணி இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர்.

எடப்பாடி ஊராட்சி ஒன்றிய அலுவலக உதவியாளர் ரமேஷ், சங்ககிரி துணை வட்டார வளர்ச்சி அலுவலராக பதவி உயர்வு பெற்று உள்ளார்.

இதற்கான உத்தரவை சேலம் மாவட்ட கலெக்டர் கார்மேகம் வழங்கி உள்ளார்.


Next Story