விழுப்புரம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து


விழுப்புரம் அருகே  நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து
x

விழுப்புரம் அருகே நெல் மூட்டைகளை ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் அருகே காணைகுப்பத்தில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தின் சார்பில் நெல் சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது. இந்த சேமிப்பு கிடங்கிற்கு ஆனாங்கூரில் உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை ஏற்றி வந்து அடுக்கி வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த சேமிப்பு கிடங்கிற்கு இன்று காலை விக்கிரவாண்டி அருகே பூங்குணத்தை சேர்ந்த சிவா (வயது 31) என்பவர் ஒரு லாரியில் 40 கிலோ எடை கொண்ட 600 நெல் மூட்டைகளை ஏற்றி வந்தார். சேமிப்பு கிடங்கிற்கு சென்றபோது முன்னால் நின்று கொண்டிருந்த சில லாரிகளுக்காக சிவா, தன்னுடைய லாரியை பின்நோக்கி இயக்கினார். அப்போது எதிர்பாராதவிதமாக லாரி, நிலைதடுமாறி சாலையோரத்தில் இருந்த முனீஸ்வரன் கோவில் சுற்றுச்சுவர் மற்றும் மின் கம்பத்தின் மீது கவிழ்ந்தது. இதில் மின் கம்பிகள் அறுந்து விழுந்ததோடு கோவில் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டது. அதோடு லாரியின் மேல்பாகம் இரண்டாக உடைந்து சேதமடைந்தது. இதுகுறித்த தகவல் அறிந்ததும் காணை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார், அங்கு விரைந்து வந்து மற்றொரு லாரியை வரவழைத்து கவிழ்ந்து கிடந்த லாரியில் இருந்த நெல் மூட்டைகளை ஏற்றி அப்புறப்படுத்தினர்.


Next Story