சீர்வரிசை பொருட்களுடன் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி


சீர்வரிசை பொருட்களுடன் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி
x

சீர்வரிசை பொருட்களுடன் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க முயற்சி

தஞ்சாவூர்

கும்பகோணத்தில் சீர்வரிசை பொருட்களுடன் காதலர்களுக்கு திருமணம் செய்து வைக்க இந்து மக்கள் கட்சியினர் முயன்றனர். காதலர் தினத்துக்கு தடைவிதிக்க கோரிக்கை விடுத்தனர்.

திருமணம் செய்து வைக்கும் முயற்சி

கும்பகோணம் அருகே உள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் வளாகத்தில் காதலர் தினத்தையொட்டி வரும் காதல் ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைக்கும் முயற்சியில் இந்து மக்கள் கட்சியினர் ஈடுபட்டனர். அப்போது இந்து மக்கள் அனுமன் சேனா கட்சி மாநில பொது செயலாளர் பாலா தலைமையில் மாவட்ட பொதுச்செயலாளர் தினேஷ், மாவட்டத்தலைவர் ரவி உள்ளிட்ட நிர்வாகிகள் தாலிக்கயிறு உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களுடன் ஊர்வலமாக வந்து காதலர் தினத்திற்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த கும்பகோணம் மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேபி தலைமையிலான போலீசார் தாராசுரம் கோவிலுக்கு வந்த காதல் ஜோடிகளை வெளியேற்றி கோவிலின் பூங்காவில் உள்ள கதவை பூட்டு போட்டு பூட்டினர். மேலும் சீர்வரிசை பொருட்களுடன் வந்த இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகளை கோவில் வளாகத்துக்குள் அனுமதிக்காமல் தடுத்து நிறுத்தி அவர்களுடன் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து இந்து மக்கள் கட்சி அனுமன் சேனா நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது காதலர் தினத்துக்கு தமிழக அரசு தடைவிதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.


Next Story