உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 13-ந் தேதி அணைக்கட்டு வருகிறார்


உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 13-ந் தேதி அணைக்கட்டு வருகிறார்
x

உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. 13-ந் தேதி அணைக்கட்டு வருகிறார். விழா நடக்கும் இடத்தை நந்தகுமார் எம்.எல்.ஏ. பார்வையிட்டார்.

வேலூர்

வேலூர் மாவட்டம் அணைக்கட்டு சட்டமன்றத் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வருகிற 13-ந் தேதி மாலை 5 மணிக்கு நடக்கிறது. இதில் தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

அமைச்சர் துரைமுருகன் மற்றும் எம்.எல்.ஏ.க்கள் உள்பட முக்கிய பிரமுகர் கலந்து கொள்கிறார்கள். நலத் திட்ட உதவிகள் வழங்கும் விழா அணைக்கட்டு அருகே மூலை கேட் பகுதியில் நடைபெற உள்ளது. இதற்காக அங்கு பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட உள்ளது. இந்த இடத்தை தி.மு.க. மாவட்ட செயலாளரும், அணைக்கட்டு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமார் நேரில் பார்வையிட்டார்.

இந்த ஆய்வின்போது ஒன்றிய செயலாளர்கள் வெங்கடேசன், கோ.குமார பாண்டியன், மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story