வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்


வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்
x

வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.

வேலூர்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி 1.4.2018 முதல் 30.6.2018 வரையிலான காலாண்டில் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து தற்போது 5 ஆண்டு நிறைவு பெற்றவர்கள் (மாற்றுத்திறனாளிகளுக்கு ஓராண்டு) உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.

இதற்கு பட்டப்படிப்பு, மேல்நிலைக்கல்வி, பட்டயப்படிப்பு, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும் பள்ளி இறுதி தேர்வு தேர்ச்சி பெறாதவர்கள் (முறையாக பள்ளியில் 9-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 10-ம் வகுப்பில் தோல்வி அடைந்தவர்கள்) விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் அல்லது இணையதளம் மூலம் பெற்று தேவையான சான்றிதழ்களுடன் சமர்ப்பிக்க வேண்டும்.

ஏற்கனவே உதவித்தொகை பெறும் இளைஞர்கள் தாங்கள் விண்ணப்பித்த தேதியிலிருந்து ஓராண்டு கழித்து 2-ம் மற்றம் 3-ம் ஆண்டின் தொடக்கத்தில் தாங்கள் பணியில் இல்லை என்ற சுய உறுதிமொழி படிவத்தை அளிக்க வேண்டும். உதவித்தொகை பெற்று வரும் பயனாளிகள் தங்களது பதிவு அட்டையை புதுப்பிக்க வேண்டும்.

இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.


Next Story