அணைக்கட்டு ஒன்றியக்குழு கூட்டம்
அணைக்கட்டு ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. இதில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
வேலூர்
அணைக்கட்டு
அணைக்கட்டு ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் ஊராட்சி ஒன்றிய கூட்டரங்கில் நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் சி.பாஸ்கரன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் சித்ரா குமாரபாண்டியன், ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் சுதாகரன், வட்டார வளர்ச்சி அலுவலர் கனகராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் கிருஷ்ணன் மேனன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் மு.பாபு வரவேற்றார்.
அப்போது கவுன்சிலர்கள் குடிநீர் வசதி, சாலை வசதி ஆகியவற்றை மேம்படுத்த நிதி ஒதுக்கித் தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகள் குறித்து பேசினர்.
கூட்டத்தில் துறை சார்ந்த அதிகாரிகள், கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். முடிவில் ஊராட்சி ஒன்றிய அலுவலக மேலாளர் சதீஷ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story