ஒன்றியக்குழு கூட்டம்


ஒன்றியக்குழு கூட்டம்
x

ஆரணி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஒன்றியக்குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் கனிமொழி சுந்தர் தலைமையில் நடந்தது. துணை தலைவர் கே.டி.ராஜேந்திரன் முன்னிலை வகித்தார்.

ஒன்றிய பொறியாளர் மதுசூதனன் புதிதாக பொறுப்பேற்றுள்ள வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமியை அறிமுகம் செய்து வைத்து பேசினார். வட்டார வளர்ச்சி அலுவலர் விஜயலட்சுமி வரவேற்றார்.

கூட்டத்தில் உறுப்பினர் கவிதா பாபு பேசுகையில், எஸ்.வி.நகரம் ஊராட்சி செங்குந்தர் தெருவில் ஒரு மாத காலமாக குடிநீர் வினியோகிக்கவில்லை.

இதுகுறித்து புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றார்.

அதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் கூறுகையில், ஒன்றிய பொறியாளரை அழைத்துச் சென்று குடிநீர் முறையாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் அல்லது மாற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

யசோதா சண்முகம் பேசுகையில், வடுகசாத்து கிராமத்தில் குளத்து மேட்டு தெருவில் உள்ள சிறுபாலம் பழுது ஏற்பட்டது. அதனை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்றர்ா.

கூட்டத்தில் ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள அனைத்து அரசு கட்டிடங்கள் இருந்தால் தகவல் தெரிவித்து, அதனை அப்புறப்படுத்தி புதிய கட்டிடம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

அதற்காக ஏதேனும் கட்டிடம் இருந்தால் தெரிவிக்கலாம் எற் தீர்மானம் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில் தலைவர், துணைத் தலைவர் உள்பட 13 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.


Next Story