ஒன்றியக்குழு கூட்டம்
கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது.
கலசபாக்கம்
கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம் நடந்தது. ஒன்றிய குழு தலைவர் அன்பரசிராஜசேகரன் தலைமை தாங்கினார்.
இதில் கவுன்சிலர்கள் கலந்து கொண்டு தங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து பேசினார்கள்.
தொடர்ந்து தலைவர் பேசுகையில், கோடை காலம் தொடங்கிவிட்ட நிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதுவரை குடிநீர் வினியோகிக்கும் முறை எப்படி இருந்ததோ அதேபோல் சரியான முறையில் குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும்.
உங்கள் பகுதிக்கு தேவையான அடிப்படை வசதிகள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகள் படிப்படியாக செய்து தரப்படும். தங்கள் பகுதியில் பழைய கட்டிடங்கள் இருந்தால் தகவல் கொடுங்கள்.
அதனை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்களுக்கு தினமும் டாக்டர்கள் மற்றும் நர்சுகள் வருகிறார்களா, பொதுமக்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்படுகிறதா,் அங்கு என்ன குறைபாடு உள்ளது என்பதை தெரிவியுங்கள்.
கிராமப்புறங்களில் மருத்துவ வசதி சரியான முறையில் கிடைத்தால் போலி டாக்டர்கள் உருவாவது தடுக்கப்படும் என்றார்.
கூட்டத்தில் துணை தலைவர் பாலசுப்பிரமணியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சத்தியமூர்த்தி, முருகன் மற்றும் கவுன்சிலர்கள், அரசு அதிகாரிகள் கலந்து கொண்டனர்.