இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார் கன்னியாகுமரியில் மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் பாட்டீல் தன்வே பேச்சு


இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளார்  கன்னியாகுமரியில் மத்திய இணை மந்திரி ராவ் சாகேப் பாட்டீல் தன்வே பேச்சு
x

இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கன்னியாகுமரில் மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக கன்னியாகுமரில் மத்திய இணை மந்திரி ராவ்சாகேப் பாட்டீல் தன்வே பேசினார்.

புகைப்பட கண்காட்சி

மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் தென்மண்டல மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பில் 75-வது சுதந்திர தினவிழா புகைப்பட கண்காட்சி கன்னியாகுமரியில் நடந்தது. நிகழ்ச்சியை மத்திய ரெயில்வே, நிலக்கரி மற்றும் சுரங்கத்துறை இணை மந்திரி ராவ் சாகேப் பாட்டீல் தன்வே ெதாடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விடுதலை போராட்டத்தில் பங்கேற்று அதிகம் அறியப்படாத வீரர்களை போற்றும் விதமாக நடத்தப்படும் இது போன்ற கண்காட்சிகள், இளம் தலைமுறையினர் இடையே தேசப்பக்தி உணர்வை ஊட்டி வருகிறது.

மோடி தலைமையிலான அரசு கடந்த 8 ஆண்டுகளில் பல துறைகளில் மிக சிறந்த சாதனைகளை படைத்துள்ளது. ஏழ்மையான குடும்பத்தில் பிறந்து, வளர்ந்து பிரதமரான நரேந்திர மோடி, எந்த ஏழையும் எந்த நலத்திட்டத்திலும் விடுபடக் கூடாது என்பதை உறுதியான கொள்கையாக கொண்டுள்ளார்.

விலையில்லா கியாஸ் இணைப்பு

விலையில்லா சமையல் கியாஸ் இணைப்பு, வீடுகளில் கழிப்பறைகள் போன்ற திட்டங்களை செயல்படுத்தி, பெண்களின் வாழ்க்கை தரத்தை மோடி அரசு உயர்த்தி உள்ளது. நாட்டில் 45 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை அனைத்து துறைகளிலும் முன்னேற்ற பிரதமர் மோடி தலைைமயிலான அரசு திட்டமிட்டு உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்ந்து பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சக தென்மண்டல தலைமை இயக்குனர் வெங்கடேஸ்வர் தலைமை தாங்கினார்.

எம்.எல்.ஏ.க்கள்

சென்னை பத்திரிகை தகவல் அலுவலகம் மற்றும் மண்டல மக்கள் தொடர்பு அலுவலக கூடுதல் தலைமை இயக்குனர் எம்.அண்ணாதுரை வரவேற்று பேசினார். விழாவில், மாவட்ட கலெக்டர் அரவிந்த், எம்.எல்.ஏ.க்கள் தளவாய்சுந்தரம், எம்.ஆர்.காந்தி, தெற்கு ரெயில்வே பொது மேலாளர் மல்லையா உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் சென்னை மண்டல மக்கள் தொடர்பு அலுவலக இயக்குனர் காமராஜ் நன்றி கூறினார்.


Next Story