மோட்டார்சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலி


மோட்டார்சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலி
x

கண்ணமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலியானார். கோர்ட்டு ஊழியர் காயமடைந்தார்.

திருவண்ணாமலை

கண்ணமங்கலம்,

கண்ணமங்கலம் அருகே மோட்டார்சைக்கிள் விபத்தில் வேன் டிரைவர் பலியானார். கோர்ட்டு ஊழியர் காயமடைந்தார்.

மோட்டார்சைக்கிள் விபத்து

கலசபாக்கம் நடுத்தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (வயது 47), வேன் டிரைவர். இவர் தனது மோட்டார் சைக்கிளில் வேலூருக்கு செனஅறார். அவருடன் திருவண்ணாமலை கோர்ட்டில் அமினாவாக வேலை செய்யும் சொரகுளத்தூரை சேர்ந்த கண்ணதாசன் சென்றார். ரமேஷ் மோட்டார்சைக்கிள் ஓட்ட, கண்ணதாசன் பின்னால் அமர்ந்து சென்றார்.

கண்ணமங்கலத்தை அடுத்த வண்ணாங்குளம் சுடுகாடு அருகே வேலூர் மெயின்ரோட்டில் எதிரே வந்த பஸ்சுக்கு வழிவிடுவதற்காக ரமேஷ் தனது மோட்டார் சைக்கிளை ரோட்டை விட்டு இறக்கினார். பின்னர் ரோட்டில் ஏற முயன்ற போது எதிர் பாராத விதமாக நிலை தடுாறி இருவரும் கீழே விழுந்து படுகாயமடைந்தனர்.

வேன் டிரைவர் பலி

இதில் ரமேஷ் சம்பவ இடத்திலேயே பலியானார். கண்ணதாசன் காயத்துடன் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

இந்த விபத்து குறித்து தகவலறிந்ததும் கண்ணமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, சப்- இன்ஸ்பெக்டர் விஜயகுமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டு ரமேஷ் உடலை பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story