வரகுபாடி ஊராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு


வரகுபாடி ஊராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு
x

வரகுபாடி ஊராட்சி துணைத்தலைவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம் குன்னம் அருகே உள்ள வரகுபாடி ஊராட்சியின் துணைத்தலைவராக சசிகலா (வயது 30) என்பவர் பதவி வகித்து வந்தார். இவர் தற்போது மக்கள் நல பணியாளர் பணிக்கு சென்று விட்டார். இதையடுத்து, வரகுபாடி ஊராட்சியில் துணைத்தலைவர் பதவி காலியாக இருந்தது. இந்தநிலையில் துணைத்தலைவர் பதவிக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டு நேற்று நடந்தது. தேர்தலில் 1-வது வார்டு உறுப்பினர் செந்தில்குமார் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.


Next Story