பட்டப்பகலில் துணிகரம்: டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு


பட்டப்பகலில் துணிகரம்:  டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 18 பவுன் நகை திருட்டு
x

தேனி அல்லிநகரத்தில் டிராவல்ஸ் அதிபர் வீட்டில் 18 பவுன் நகை திருடுபோனது

தேனி

தேனி அல்லிநகரம் ரத்தினம் நகரை சேர்ந்தவர் சரவணன். இவர், டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அவருடைய மனைவி பொற்செல்வி. இன்று இவர்கள் 2 பேரும் வீட்டை பூட்டி விட்டு தேனியில் உள்ள டிராவல்ஸ் நிறுவன அலுவலகத்திற்கு சென்றனர். இதையடுத்து மாலை வீட்டுக்கு வந்தபோது கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர்கள் உள்ளே சென்று பார்த்தனர். அப்போது பீரோவில் இருந்த 18¼ பவுன் நகைகள் மற்றும் ரூ.65 ஆயிரம் திருடுபோய் இருந்தது. இதுகுறித்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் சரவணன் புகாா் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியம்மாள் வழக்குப்பதிவு செய்து நகை, பணத்தை திருடிய மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார். பட்டப்பகலில் நடந்த இந்த துணிகர திருட்டு சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Next Story