கால்நடை மருத்துவ முகாம்
இளையான்குடி அருகே கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
இளையான்குடி,
இளையான்குடி அருகே உள்ள கொடிமங்கலம் கிராமத்தில் கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. முகாமிற்கு நாகமுகுந்தன்குடி ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்றது. கால்நடை மருத்துவர்கள் முருகன், ஸ்ரீவித்யா, திவான் பாட்ஷா ஆகியோர் முன்னிலையில் கால்நடைகளுக்கான சிறப்பு சுகாதார பராமரிப்பு மற்றும் விழிப்புணர்வு பற்றிய விளக்கங்களை எடுத்துரைத்தார்கள்.
முகாமில் கோமாரி தடுப்பூசி 200 பசுக்களுக்கு செலுத்தியும், 458 வெள்ளாடுகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகள் மற்றும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டன. 3 சிறந்த கிடேரி கன்றுகளை வளர்த்தவர்களுக்கு சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டது. முகாமில் கால்நடை இன்ஸ்பெக்டர் முத்துக்குமரன், பராமரிப்பு உதவியாளர்கள் ராமச்சந்திரன், தென்னரசு கலந்துகொண்டு கால்நடை வளர்ப்பவர்களுக்கு தேவையான மருந்துகள், விழிப்புணர்வு ஆலோசனைகளை வழங்கினார்கள்.