கால்நடை மருத்துவ முகாம்


கால்நடை மருத்துவ முகாம்
x

மானாமதுரை கிராமத்தில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.

ராணிப்பேட்டை

நெமிலியை அடுத்த காட்டுப்பாக்கம் அருகே உள்ள கீழ்களத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட மானாமதுரை கிராமத்தில், தமிழ்நாடு நீர்ப்பாசன வேளாண்மை நவீனமாக்கல் திட்டத்தின் கீழ் கால்நடைகளுக்கு மலடு நீக்க மருத்துவ முகாம் நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் குமார் மற்றும் துணைத் தலைவர் தேவி விஜயகுமார் ஆகியோர் முகாமை தொடங்கி வைத்தனர். இதில் நெமிலி கால்நடை உதவி மருத்துவர் சுப்பிரமணியன் தலைமையில், கால்நடை ஆய்வாளர் சிவக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர் குமார், செயற்கை முறை கருவூட்டுனர் சுதாகர் ஆகியோரை கொண்ட குழுவினர், கால்நடைகளுக்கு பெரியம்மை நோய் தடுப்பூசி, குடற்புழு நீக்கம், மலடு நீக்க சிகிச்சை, சினை பரிசோதனை, சினை ஊசி மற்றும் நாய்களுக்கு வெறி நாய் தடுப்பூசி, ஆண்மை நீக்கம் உள்ளிட்ட மருத்தவ சிகிச்சை அளித்தனர்.

200 பசுக்கள், 200 செம்மறி ஆடுகள், 190 வெள்ளாடுகள் உள்பட சுமார் 600 கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.


Next Story