கால்நடை மருத்துவ முகாம்
சேரி ஊராட்சியில் கால்நடை மருத்துவ முகாம் நடைபெற்றது.
காவேரிப்பாக்கத்தை அடுத்த சேரி ஊராட்சியில் தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நேற்று நடைபெற்றது. முகாமிற்கு ஊராட்சி மன்ற தலைவர் ரமணிராஜீ தலைமை தாங்கினார். முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் அரிதாஸ், ஒன்றிய கவுன்சிலர் யுவராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். துணைத் தலைவர் டில்லிபாபு வரவேற்றார். முகாமில் டாக்டர் சந்தோஷ்குமார் தலைமையில் மருத்துவ குழுவினர் கலந்து கொண்டு, சினை பரிசோதனை, செயற்கை முறை கருவூட்டல், மலட்டு நீக்கி சிகிச்சை, நோயற்ற கால்நடைகளுக்கு முன்னெச்சரிக்கையாக சிகிச்சை அளித்தல், குடற்புழு நீக்கம், வெறி நாய் கடி தடுப்பூசி, கோழிகளுக்கு வெள்ளை கழிச்சல் தடுப்பூசி உள்ளிட்ட சிகிச்சை அளிக்கப்பட்டது.
அப்போது சிறப்பாக பசுமாட்டு கன்று வளர்த்த மூன்று நபர்களுக்கும், சிறப்பாக பசு மாடு வளர்த்த மூன்று நபர்களுக்கும் பரிசு வழங்கப்பட்டது. இந்த முகாமில் 200-க்கும் மேற்பட்ட மாடுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டன. இதில் கலவை ஆதிபராசக்தி தோட்டக்கலை கல்லூரி மாணவிகள் லோகேஸ்வரி, மதுமிதா, மம்தா, மணிமொழி, நிலாலட்சுமி, நிஷா இவாஞ்சலின், உட்பட பலர் உடன் இருந்தனர்.