தரமற்ற தார் சாலை அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு
ஆரணி அருகே தரமற்ற தார் சாலை அமைக்கும் பணிக்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆரணி
செய்யாறு தாலுகா மேல்சீசமங்கலம் ஊராட்சியில் பணஞ்சோதி என்ற கிராமம் உள்ளது. திருமணி கிராமத்தில் இருந்து பணஞ்ஜோதி கிராமத்திற்கு சுமார் 2 கிலோ மீட்டர் தொலைவிற்கு தார் சாலை அமைக்கும் பணி கடந்த 6 மாதத்துக்கு முன்பு தொடங்கியது.
பின்னர் அந்த பணி கிடப்பில் போடப்பட்டது.
இந்த நிலையில் தார்சாலை அமைக்கும் பணி மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த தார்சாலை தரமற்ற முறையில் நடைபெறுவதை பார்த்த கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் தரமான முறையில் சாலை அமைக்க வேண்டும் என்று கூறினர்.
அப்போது, தரமற்ற பணி நடைபெறுவதை நிறுத்த வேண்டும் எனக்கூறி திடீரென ஆர்ப்பாட்டம் செய்தனர்.
இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் சம்பந்தப்பட்ட ஒப்பந்ததாரர் அதிகாரிகளைக் கொண்டு சாலை பணியை செய்ய வேண்டும் என கோஷமிட்டனர்.
இதனால் தொழிலாளர்கள் பணியை நிறுத்திவிட்டு சென்றுவிட்டனர்.