58 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.


58 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.
x

மடத்துக்குளத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட 58 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

திருப்பூர்


மடத்துக்குளத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட 58 விநாயகர் சிலைகள் அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டன.

விநாயகர் சிலைகள் ஊர்வலம்

விநாயகர் சதுர்த்தியை ஒட்டி மடத்துக்குளம்,கணியூர், குமரலிங்கம் சுற்று வட்டாரப் பகுதிகளில்களிமண்ணால் ஆன விநாயகர் சிலைகளை வீடுகளில் வைத்து பொதுமக்கள் வழிபட்டனர். இது தவிர இந்து முன்னணி சார்பில் குறிப்பிட்ட பொது இடங்களில் விநாயகர் சிலைகளை வைத்து வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டது. அதன்படி மடத்துக்குளத்தில் 28 விநாயகர் சிலைகளும், குமரலிங்கத்தில் 20 சிலைகளும், கணியூரில் 10 சிலைகளும் வைக்கப்பட்டு இருந்தது.

இந்த சிலைகளை ஊர்வலமாக எடுத்துச்சென்று அமராவதி ஆற்றில் கரைக்கும் விசர்ஜன நிகழ்வு நேற்று மாலை நடைபெற்றது. குமரலிங்கத்தில் வைக்கப்பட்டிருந்த 20 விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஏற்றப்பட்டு முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது.

அமராவதி ஆற்றில் கரைப்பு

கணியூரில் வைக்கப்பட்டிருந்த 10 சிலைகள் ஊர்வலமாக மடத்துக்குளம் கொண்டு வரப்பட்டு அமராவதி ஆற்றில் கரைக்கப்பட்டது. மடத்துக்குளத்தில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலைகள் வேடபட்டி பிரிவு, கழுகரை ரோடு, பழனி ரோடு உள்ளிட்ட முக்கிய வீதிகளின் வழியாக ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. பக்தி கோஷம் முழங்க ஆண்கள், பெண்கள் உள்பட ஏராளமானோர் உற்சாகமாக ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

பின்னர் அமராவதி ஆற்றுப்பாலத்தின் அருகில் இதற்காக ஒதுக்கப்பட்டிருந்த இடத்தில் சிலைகள் அனைத்தும் கரைக்கப்பட்டன. மேலும் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்ட நூற்றுக்கணக்கான விநாயகர் சிலைகளும் இந்த சிலைகளுடன் சேர்த்து எடுத்து வரப்பட்டு ஆற்றில் கரைக்கப்பட்டது. உடுமலை போலீஸ் துணை சூப்பிரண்டு தேன்மொழிவேல் தலைமையில் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.


Related Tags :
Next Story