தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது - அண்ணாமலை


தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது - அண்ணாமலை
x

தமிழ்நாட்டில் அறம் சார்ந்த ஆட்சி அமையப்போகிறது என்று பாஜக தலைவர் அண்ணாமலை கூறினார்.

சென்னை

மதுரை,

மதுரை பொதுக்கூட்டத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

தமிழை வளர்க்க பிரதமர் மோடி பாடுபடுகிறார். தமிழின் பெருமை, தமிழனின் பெருமையை உலகெல்லாம் எடுத்துச் சென்றுவிட்டார். ஐ.நா. சபையில் யாதும் ஊரே யாவரும் கேளிர் என பேசி, திருக்குறளின் பெருமையை பட்டிதொட்டி எல்லாம் பிரதமர் எடுத்துரைத்தார். வாரணாசியில், காசி தமிழ் சங்கம் வளர்த்தார். செங்கோலின் பெருமையை நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி நிலை நாட்டினார்.

நடாளுமன்றத்திற்கு எப்போது செங்கோல் சென்றதோ அப்போதே தமிழகத்தில் அறம் சார்ந்த ஆட்சி அமைப்போகிறது. 2024ல் அறம் சார்ந்த ஆட்சியா இல்லை 2026 அறம் சார்ந்த ஆட்சியா என்பதை ஆண்டவன் முடிவு செய்வார். புதிய நாடாளுமன்றத்தில் பேசப்பட்ட முதல் மொழி தமிழ் மொழிதான். நாடாளுமன்றத்தில் செங்கோல் மட்டும் நிறுவப்படவில்லை. தமிழகத்தில் அரசியல் மாற்றத்திற்காக அஸ்திவாரம் நிறுவப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story