இளைஞர்களுக்கு தொழில்நெறி, திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு வார விழா


இளைஞர்களுக்கு தொழில்நெறி, திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு வார விழா
x

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில்நெறி, திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு வார விழா நாளை தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டத்தில் இளைஞர்களுக்கு தொழில்நெறி, திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு வார விழா நாளை தொடங்கி 15-ந்தேதி வரை நடக்கிறது.

தொழில்நெறி, திறன் மேம்பாடு

மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

இளைஞர்களுக்கு பல்வேறு படிப்புகள், பணிவாய்ப்புகள் மற்றும் போட்டித்தேர்வுகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் தொழில்நெறி மற்றும் திறன் மேம்பாட்டு விழிப்புணர்வு வாரம் ஜூலை மாதத்தில் 2-வது வாரத்தில் ஒவ்வொரு ஆண்டும் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்குரிய திறன் விழிப்புணர்வு வார விழா நாளை(திங்கட்கிழமை) முதல் 15-ந் தேதி வரை 5 நாட்கள் நடைபெறுகிறது.

ஒவ்வொரு பிரிவினருக்கும் காலை 11 மணி முதல் நேரடியாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தொழில்நெறி வழிகாட்டுதல் மற்றும் திறன் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மயிலாடுதுறையில் உள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும், 12-ந் தேதி மகளிருக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி மயிலாடுதுறை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் நடைபெறுகிறது.

வேலைவாய்ப்பு மையம்

ஜூலை 13-ந் தேதி மூன்றாம் பாலினத்தவர்களுக்கான வழிகாட்டுதல் நிகழ்ச்சி இணைவழியாகவும், ஜூலை 14-ந் தேதி மயிலாடுதுறை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்திலும், தொழில்திறன் அறிந்திருக்கும் உரிய சான்றுகள் இல்லாதோரை கண்டறிந்து அவர்களுக்கு பயிற்சியளித்தல் தொடர்பான வழிகாட்டுதல் நிகழ்ச்சியும், ஜூலை 15-ந்தேதி "தேசியதிறன்" நாளன்று மயிலாடுதுறை, மூவலூர் ஏழுமலையான் தொழிற்பயிற்சி நிலையத்திலும் நடக்கி்றது.

இதில் தன்னார்வ பயிலும் வட்டம், அரசு போட்டித்தேர்வுகள் மற்றும் அதற்கான இலவச பயிற்சி வகுப்புகள், மெய்நிகர் கற்றல் இணையதளம், தனியார் வேலைதேடுபவர்களுக்கு தொடங்கப்பட்டுள்ள தனியார்துறை வேலை வாய்ப்பு இணையம், திறன் பயிற்சிகள், சுயதொழில் வாய்ப்புகள், குறித்து விளக்கப்பட உள்ளது.

இந்த நிகழச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தை சார்ந்த இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story