வி.பி.ராமன் சாலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்


வி.பி.ராமன் சாலை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
x

9 மாவட்டங்களில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை,

சென்னை தலைமை செயலகத்தில் கூட்டுறவுத் துறை, உணவுத்துறை, இந்து சமய அறநிலையத்துறை, பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.

முதலாவதாக பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் வி.பி.ராமன் வசித்து வந்த லாயிட்ஸ் கார்னர் என்று பெயரிடப்பட்ட வீடு அமையவுள்ள பகுதியான மெரினா கடற்கரை, காமராஜர் சாலை முதல் இந்தியன் வங்கி தலைமை அலுவலகம் வரையுள்ள பகுதிக்கு "வி.பி.ராமன் சாலை" என பெயர் சூட்டப்பட்டது. பெயர் சூட்டபட்ட பலகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

அதனை தொடர்ந்து 9 மாவட்டங்களில் 84 நவீன நெல் சேமிப்பு தளங்களை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். அரியலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருவள்ளூர், சிவகங்கை, திருச்சி, தஞ்சை, திருவாரூர், மதுரையில் சேமிப்பு தளம் திறக்கப்பட்டுள்ளது. 9 மாவட்டங்களில் 1,16,800 மெட்ரிக் டன் கொள்ளளவில் ரூ.39 கோடி மதிப்பீட்டில் நெல் சேமிப்பு தளங்கள் கட்டப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டத்தில் கட்டப்பட்டிருக்கக்கூடிய வட்ட செயல்முறை கிடங்குகளையும் முதல்-அமைச்சர் திறந்து வைத்தார். இதேபோல் பல்வேறு மாவட்டங்களில் கட்டப்படவுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வள்ளலாரின் முப்பெரும் விழா மற்றும் தொடர் அன்னதான திட்டத்தினை செயல்படுத்தக்கூடிய வகையில் தமிழக அரசின் மானியத்திற்கான காசோலையை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story