வி.பி.எம்.எம். கல்லூரி பட்டமளிப்பு விழா


வி.பி.எம்.எம். கல்லூரி பட்டமளிப்பு விழா
x
தினத்தந்தி 18 Jun 2023 12:15 AM IST (Updated: 18 Jun 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

வி.பி.எம்.எம். கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது

விருதுநகர்

ஸ்ரீவில்லிபுத்தூர்

ஸ்ரீவில்லிபுத்தூர் கிருஷ்ணன்கோவில் வி.பி.எம்.எம். கல்வி நிறுவனத்தில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. பொறியியல் மற்றும் நர்சிங் படித்த மாணவிகளுக்கு நடைபெற்ற பட்டமளிப்பு விழாவிற்கு கல்லூரி தாளாளர் பழனிசெல்வி சங்கர் தலைமை தாங்கினார். தொழில் அதிபரும் துணை சேர்மனுமான தங்கபிரபு முன்னிலை வகித்து விழாவை தொடங்கி வைத்து பேசும்போது, இந்தியா உலக அளவில் வல்லரசாக மாறி வருகிறது. அதற்கு காரணம் இந்தியாவில் உள்ள பொறியியல் துறையும், மருத்துவ துறையும் முதலிடம் வகிக்கிறது. இந்தியாவில் மற்ற உலக நாடுகளை விட இளைஞர்களின் சக்தி அதிகம். எனவே உலகையே வழிநடத்தி செல்லும் ஆற்றல் இந்தியாவுக்கு உள்ளது.

பொறியியல் பட்டப்படிப்பிலும், மருத்துவ துறையிலும் அதிக அளவு வேலை வாய்ப்புகள் உள்ளன. மருத்துவ துறையில் படிக்கும் மாணவிகளும் பொறியியல் துறையில் படிக்கும் மாணவிகளும் தங்களது கடமையை சரியாக செய்ய வேண்டும். ஆராய்ச்சி துறையில் முக்கியத்துவம் கொடுத்து ஆராய்ச்சியில் ஈடுபட வேண்டும். அதேபோல் கட்டுமானம், கம்ப்யூட்டர் துறையிலும் பல்வேறு புதிய வடிவமைப்பு, நுணுக்கங்களை கண்டுபிடித்து இந்திய மாணவர்கள் சாதித்து வருகின்றனர். இது மிகவும் பாராட்டகூடியது என்றார். இந்தநிகழ்ச்சியில் இயக்குனர் ஜெயக்குமார், அட்மிஷன் இயக்குனர் அசோக்குமார், முதல்வர் மணிகண்டன், சரவணன், சுரேஷ், சியாமளாகி ரேஷ், மற்றும் துறைத்தலைவர்கள் கலந்து கொண்டனர். விழாவில் 400-க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு தாளாளர் பழனி செல்விசங்கர் பட்டம் வழங்கினார்.


Next Story