2 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் பாதிப்பு


2 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் பாதிப்பு
x

நாட்டறம்பள்ளி பகுதியில் 2 நாட்களாக மின்சாரமின்றி பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

திருப்பத்தூர்

ஜோலார்பேட்டை

நாட்டறம்பள்ளி மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் 6-ந் தேதி இரவு திடீரென பலத்த சூறாவளி காற்று, இடியுடன் கூடிய மழை பெய்தது. அப்போது ஆர்.சி.எஸ். மெயின் ரோட்டில் உள்ள டிரான்ஸ்பார்மர் பழுதாகி உள்ளது. இதனால் அந்தப்பகுதியில் மின்சாரம் தடைபட்டது. இரண்டு நாட்களாகியும் இதுவரை மின்சாரம் விநியோகம் செய்யவில்லை.

இதனால் அப்பகுதி பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பொது மக்கள் புகார் கொடுத்தும் இதுவரை எந்த வித நடவடிக்கையும் எடுக்க வில்லை என்று கூறப்படுகிறது. பழுதான டிரான்ஸ்பார்மரை உடனடியாக சீரமைத்து மின்வினியோகம் செய்ய வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story