கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாக வெளியேறும் தண்ணீர்


கால்வாயில் உடைப்பு ஏற்பட்டதால் வீணாக வெளியேறும் தண்ணீர்
x

பழனி அருகே கால்வாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறியது.

திண்டுக்கல்

பழனி மற்றும் கொடைக்கானல் பகுதியில் பரவலாக மழை பெய்வதால் வரதமாநதி, பாலாறு-பொருந்தலாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதில் வரதமாநதி அணை நிரம்பி உபரிநீர் வெளியேறி வருகிறது. மேலும் அணையில் இருந்து பாசனத்துக்கு கால்வாய்களிலும் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் பழனி, ஆயக்குடி பகுதியில் மழை பெய்ததால் வையாபுரிக்குளத்துக்கு செல்லும் பிரதான கால்வாயில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.

அதிகாலையில் பழனி மயிலாடும்பாறை சவுக்கடிமடை அருகில் கால்வாய் கரையில் உடைப்பு ஏற்பட்டது. இதனால் தண்ணீர் வெளியேறி அருகில் உள்ள விளைநிலங்களுக்குள் புகுந்தது. நல்ல வேளையாக அங்கு சாகுபடி ஏதும் இல்லாததால் சேதம் ஏதுமில்லை. எனினும் வையாபுரிக்குளத்துக்கான நீர்வரத்து தடைபட்டது. இதற்கிடையே தகவலறிந்த பொதுப்பணித்துறை அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பின்னர் பொக்லைன் எந்திரம் மூலம் கரை உடைப்பு சரிசெய்யப்பட்டது.


Next Story