குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்


குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும்
x
தினத்தந்தி 1 Feb 2023 12:15 AM IST (Updated: 1 Feb 2023 3:30 PM IST)
t-max-icont-min-icon

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தலைஞாயிறு பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்

வாய்மேடு:

குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என தலைஞாயிறு பேரூராட்சி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பேரூராட்சி கூட்டம்

தலைஞாயிறு பேரூராட்சி மன்ற சாதாரண கூட்டம் தலைவர் செந்தமிழ் செல்வி பிச்சையன் தலைமையில் நடைபெற்றது. பேரூராட்சி துணைத் தலைவர் கதிரவன் முன்னிலை வகித்தார். பேரூராட்சி செயல் அலுவலர் சரவணன் வரவேற்றார்.

கூட்டத்தில் உறுப்பினர்கள் இடையே நடந்த விவாதம் வருமாறு:

கிருத்திகா தேவி (தி.மு.க.):- தலைஞாயிறு பேரூராட்சி 2-வது வார்டில்

தடுப்புச்சுவர் மற்றும் மதகு அமைத்து தர வேண்டும்.

குடிநீர் தட்டுப்பாடு

அருணா மாரிமுத்து (அ.தி.மு.க.):- தலைஞாயிறு பேரூராட்சி 7-வது வார்டு கீழவீதியில் கொள்ளிடம் கூட்டுக் குடிநீர்திட்ட குடிநீர் சீராக வரவில்லை. கோடை காலத்தை கருத்தில் கொண்டு கொள்ளிடம் கூட்டுக் குடிநீர் திட்ட பிரதான குழாயில் இருந்து கீழவீதிக்கு மட்டும் குடிநீர் இணைப்பு அமைத்து தர வேண்டும்.

பாமா பாலச்சந்தர் (அ.தி.மு.க.):- தலைஞாயிறு பேரூராட்சி 5-வது வார்டு கேசவன் ஓடை, சிந்தாமணி தெரு மற்றும் 6-வது வார்டு சந்தானம் தெரு பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.. இந்த பகுதியில் சீரான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இதே போல உறுப்பினர்கள், முத்துலட்சுமி, ராஜேந்திரன், அஜய் ராஜா மாதவன் கலந்து கொண்டு தங்களை கருத்துக்களை தெரிவித்தனர். முடிவில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் குமார் நன்றி கூறினார்.


Next Story