நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம் -அண்ணாமலை பேட்டி


நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம் -அண்ணாமலை பேட்டி
x

நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்துவோம் என்று குன்னூரில் நடந்த பாத யாத்திரையில் அண்ணாமலை தெரிவித்தார்.

ஊட்டி,

பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பாத யாத்திரையை நீலகிரி மாவட்டத்தில் 2-வது நாளாக குன்னூர் தொகுதியில் நேற்று மதியம் தொடங்கினார்.

அவருக்கு பா.ஜ.க. நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் மலர்கள் தூவி உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். மேலும் பலர் அவருடன் செல்பி மற்றும் புகைப்படம் எடுத்துக்கொண்டனர்.

நாடாளுமன்ற தேர்தல்

பின்னர் அண்ணாமலை நிருபர்களிடம் கூறுகையில், 'என் மண் என் மக்கள்' பாத யாத்திரையில் மட்டும் தான் தற்போது அனைவரின் கவனமும் உள்ளது. வருகிற நாடாளுமன்ற தேர்தலுக்காக பா.ஜ.க.வை வலுப்படுத்தும் வேலையில் ஈடுபட்டு உள்ளோம் என்றார்.


Next Story