"இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்!" - முதல் அமைச்சர்
திருவான்மியூரில் நடைபெற்ற அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழாவில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார்.
சென்னை,
தமிழக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஏற்பட்ட லேசான காய்ச்சல் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்தார். இதையடுத்து அவர் பங்கேற்க இருந்த நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.
சென்னை திருவான்மியூரில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். இல்ல திருமண விழா இன்று காலை நடந்தது. சில நாள் ஓய்வுக்குப் பின்னர் இந்த திருமண விழாவில் கலந்து கொண்ட முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தி பேசினார்.
இந்த நிலையில் இந்த திருமணத்தில் கலந்து கொண்டது குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்! என்று கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், 'சில நாள் ஓய்வுக்குப் பின்பு, மாண்புமிகு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் இல்லத் திருமண விழாவில் இன்று கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினேன்.
இதுவும் கழக நிகழ்ச்சிதான். இதுபோன்ற திருமண நிகழ்வுகள்தான் கழகத்தின் ஒற்றுமையை, வலிமையை எடுத்துக்கூறும் தூதுவர்கள்!' என்று பதிவிட்டுள்ளார்.