மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில்


மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில்
x

மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

மதுரை

மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகாவுக்கு வாராந்திர சிறப்பு ரெயில் செப்டம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஓகாவுக்கு சிறப்பு ரெயில்

மேற்கு மண்டல ரெயில்வே சார்பில் மதுரையில் இருந்து குஜராத் மாநிலம் ஓகா கோட்டைக்கு வாராந்திர சிறப்புக்கட்டண சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் இயக்கம் நாளை (வெள்ளிக்கிழமை) முடிகிறது. இதற்கிடையே, இந்த ரெயில்களின் இயக்கம் நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, இந்த ரெயில் (வ.எண்.09520) ஓகாவில் இருந்து வருகிற 7-ந் தேதி, 14,21,28 மற்றும் அடுத்த மாதம் 4,11,18 மற்றும் 25-ந் தேதிகளில் இயக்கப்படுகிறது. அதாவது, ஓகாவில் இருந்து திங்கட்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்பட்டு வியாழக்கிழமை நண்பகல் 11.45 மணிக்கு மதுரை ரெயில் நிலையம் வந்தடைகிறது. மறுமார்க்கத்தில் இந்த ரெயில் (வ.எண்.09519) வருகிற 11-ந் தேதி, 18-ந் தேதி, 25-ந் தேதி மற்றும் அடுத்த மாதம் 1-ந் தேதி, 8,15,22,29-ந் தேதி ஆகிய நாட்களில் மதுரையில் இருந்து இயக்கப்படுகிறது. மதுரையில் இருந்து வியாழக்கிழமை நள்ளிரவு 1.15 மணிக்கு (ரெயில்வே நேரப்படி வெள்ளிக்கிழமை) புறப்படும் ரெயில் ஞாயிற்றுக்கிழமை காலை 10.20 மணிக்கு ஓகா ரெயில் நிலையம் சென்றடையும்.

நிற்கும் இடங்கள்

ரெயிலில், ஒரு 2-அடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி, 2 மூன்றடுக்கு குளிரூட்டப்பட்ட பெட்டிகள், 12 இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி பெட்டிகள், 4 பொதுப்பெட் டிகள், 2 மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் இணைக்கப்பட்டிருக்கும். ரெயில்கள் துவாரகா, ஜாம்நகர், ராஜ்கோட், சுரேந்திரன்நகர், அகமதாபாத், நாதியத், ஆனந்த், வதோதரா, பரூச், சூரத், நந்துர்பர், அமல்னெர், ஜலகாவ்ன், புசாவல், அகோலா, புர்னா, நான்டெட், நிஜாமாபாத், கச்சிகுடா, மஹபூப்நகர், துரோணசலம், கூட்டி, ரேணிகுண்டா, காட்பாடி, வேலூர், திருவண்ணாமலை, விழுப்புரம், ஸ்ரீரங்கம், திருச்சி, மணப்பாறை, திண்டுக்கல், கொடைரோடு, கூடல்நகர் ஆகிய ரெயில் நிலையங்களில் நின்று செல்லும். இந்த ரெயிலில் வழக்கமான கட்டணத்தை விட 1.3 மடங்கு கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்படும்.


Related Tags :
Next Story