ஜமாபந்தி நிறைவு விழாவில் 130 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


ஜமாபந்தி நிறைவு விழாவில் 130 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x

திருப்பத்தூர் தாலுகாவில் நடந்த ஜமாபந்தி நிறைவு விழாவில் 130 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி

திருப்பத்தூர்

திருப்பத்தூர்

திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி கடந்த 18-ந் தேதி தொடங்கி 25-ந் தேதி வரை நடைபெற்றது.

இதில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி பெற்றார். முதியோர் உதவித்தொகை, வாரிசுசான்று உடனே வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

இதன் நிறைவுவிழா திருப்பத்தூர் தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் சிவப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது.

கிராம நிர்வாக அலுவலர் சுந்தரேசன் ஜமாபந்தி விளக்கவுரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி, எம்.எல்.ஏ.க்கள், ஏ.நல்லதம்பி, க.தேவராஜ், கோ.செந்தில்குமார் கலந்துகொண்டு பேசினார்கள்.

நிகழ்ச்சியில் 22 பேருக்கு முதியோர் உதவித்தொகை, 21 பேருக்கு உதவித்தொகை, 11 பேருக்கு மாற்றுத் திறனாளிகளுக்கான உதவித்தொகை மற்றும் குடும்ப அட்டை, விவசாயிகளுக்கு விதைகள், தென்னங் கன்றுகள், மருந்து தெளிப்பான் என 130 பேருக்கு ரூ.6 லட்சத்து 80 ஆயிரத்து 570 மதிப்புள்ள நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

திருப்பத்தூர் வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் எஸ்.ராஜேந்திரன், நகராட்சி தலைவர் சங்கீதா வெங்கடேஷ், கந்திலி ஒன்றியக்குழு தலைவர் திருமதி திருமுருகன், நகராட்சி துணைத்தலைவர் சபியுல்லா, தனி தாசில்தார் குமார், வட்ட வழங்கல் அலுவலர் திருமலை, உதவி வேளாண்மை அலுவலர் ராகினி, வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் உள்படபலர் கலந்து கொண்டனர்.

முடிவில் கிராம நிர்வாக அலுவலர் பெருமாள் நன்றி கூறினார்.


Next Story