மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி


மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி
x
தினத்தந்தி 20 Dec 2022 12:15 AM IST (Updated: 20 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

தென்காசியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் ஆகாஷ் வழங்கினார்.

தென்காசி

தென்காசி மாவட்ட மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. மாவட்ட கலெக்டர் ஆகாஷ் தலைமை தாங்கி, பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார். மேலும் முதல்-அமைச்சரின் முகவரி துறையின் சிறப்பு குறை தீர்வு வாரத்தையும் தொடங்கி வைத்தார்.

கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, அடிப்படை வசதிகள், பட்டா மாறுதல், மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகை உட்பட 360 மனுக்கள் பெறப்பட்டன. இந்த மனுக்களை பரிசீலனை செய்து உரிய நடவடிக்கை எடுக்க அனைத்து துறை அலுவலர்களுக்கும் கலெக்டர் அறிவுரை வழங்கினார். மேலும் மூளை முடக்குவாதத்தால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் கீழ் 3 பயனாளிகளுக்கு நடைவண்டிகளை வழங்கினார்.

கூட்டத்தில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் முத்துமாதவன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் (பொறுப்பு) நடராஜன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சங்கரநாராயணன், உதவி ஆணையர் (கலால்) ராஜ மனோகரன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story