நாரசிங்கனூர் ஊராட்சியில்பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள்அமைச்சர் பொன்முடி வழங்கினார்
நாரசிங்கனூர் ஊராட்சியில் பொதுமக்களுக்கு அமைச்சர் பொன்முடி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டி ஒன்றியம் நாரசிங்கனூர் ஊராட்சியில் ரூ.22 லட்சத்து 65 ஆயிரம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் திறப்பு மற்றும் ஊரக வளர்ச்சித்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் மூலம் பொதுமக்களுக்கு ரூ.43 லட்சத்து 70 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பழனி தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் சித்ரா விஜயன், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற தலைவர் பாக்கியநாதன் வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை திறந்து வைத்ததுடன், பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசுகையில்,
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து கிராம புறங்களில் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்தும், கிராம புற பெண்கள் நலனுக்காக புதுமை பெண் திட்டத்தை செயல்படுத்தியுள்ளார். மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை மாதம் தோறும் ரூ.1000 வழங்கிவருகிறார், அனைத்து சமுதாய மக்கள் அனைவரும் சமம் என்ற திராவிட மாடல் ஆட்சி செய்து வரும் ஒரே முதல்-அமைச்சா் மு.க. ஸ்டாலின் மட்டும் தான் என்றார். இதில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், தாசில்தார் ஆதிசக்தி சிவக்குமரி மன்னன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுமதி, நாராயணன், வேளாண்மை துறை உதவி இயக்குனர்கள் சரவணன், ஜெய்சன், ஒன்றிய குழு தலைவர் சங்கீத அரசி ரவிதுரை, துணை தலைவர் ஜீவிதா ரவி, ஆத்மா குழு தலைவர் வேம்பி ரவி, ஒன்றிய செயலாளர்கள் ரவிதுரை, ஜெயபால், மாவட்ட கவுன்சிலர் மீனா வெங்கடேசன், கண்காணிப்பு குழு எத்திராசன், ஒன்றிய கவுன்சிலர்கள் அருணாசலம், முகிலன், செல்வம், சாவித்திரி உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயற்பொறியாளர் ராஜா நன்றி கூறினார்.