ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? - இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள எளிய வழி


ஆம்னி பஸ்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு? - இணையதளத்தில் பொதுமக்கள் தெரிந்து கொள்ள எளிய வழி
x
தினத்தந்தி 21 Sep 2022 9:16 AM GMT (Updated: 21 Sep 2022 9:43 AM GMT)

தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சென்னை,

தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலமே உள்ள நிலையில், பொதுமக்கள் சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு செல்ல பேருந்துகளில் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்ய தொடங்கியுள்ளனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆம்னி பஸ்களில் வழக்கமான கட்டணத்தை விட 3 மடங்கு கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னையில் இருந்து மதுரைக்கு செல்ல ரூ.3000 கட்டணம் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது, இரண்டு முதல் மூன்று மடங்கு கட்டணம் உயர்ந்துள்ளதால் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே, இதற்கு அரசு கண்காணித்து உரிய நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த நிலையில், ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட கட்டணம் எவ்வளவு என்பதை இணையதளம் மூலம் தெரிந்து கொள்ள எளிய வழி அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி http://aoboa.co.in/BusFare/index என்ற இணையதளத்திற்கு சென்று ஆம்னி பஸ்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் எவ்வளவு என பொதுமக்கள் தெரிந்து கொள்ளலாம். நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை காட்டிலும் கூடுதல் கட்டணத்தை ஆம்னி பஸ்கள் வசூலிக்கும் பட்சத்தில் அதே இணையதளத்தில் புகார் தெரிவிக்கலாம் என்று அனைத்து ஆம்னி பஸ்கள் உரிமையாளர் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஆம்னி பஸ்களில் அவற்றின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இருக்கை வசதி , படுக்கை வசதி , குளிர்சாதன வசதி என பேருந்துகளின் வசதிகளுக்கு ஏற்ப கட்டணங்கள் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


Next Story