சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த 65-வது பத்தியில் இருந்த வார்த்தைகள் என்னென்ன?


சட்டசபையில் கவர்னர் வாசிக்க மறுத்த 65-வது பத்தியில் இருந்த வார்த்தைகள் என்னென்ன?
x

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று நடைபெற்றது.

சென்னை,

இந்தாண்டுக்கான முதல் தமிழக சட்டசபை கூட்டம் இன்று காலை 10 மணிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கியது. காலை 10 மணிக்கு கூட்ட அரங்கில் கவர்னர் தனது உரையை வாசிக்கத் தொடங்கினார். இதன்படி காலை.10.50 மணி வரை கவர்னர் தனது உரையை வாசித்தார். உரை வாசித்து முடிக்கப்பட்டதும், அதன் தமிழாக்கத்தை பேரவைத்தலைவர் மு.அப்பாவு வாசித்தார்.

இதற்கிடையில், சட்டசபை முதல் கூட்டத்திற்காக தமிழக அரசு தயார் செய்து கொடுத்த உரையில் உள்ள 65-வது பத்தியை கவர்னர் வாசிக்க மறுத்துவிட்டதாக தெரியவந்துள்ளது. அதில், 'சமூக நீதி' முதல் 'திராவிட மாடல் ஆட்சி' வரை 10-க்கும் மேற்பட்ட வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.

இந்தப் பத்தியில் இருந்த வார்த்தைகள் விவரம்:-

* சமூகநீ்தி

* சுயமரியாதை

* அனைவரையும் உள்ளடக்கியவளர்ச்சி சமத்துவம்

* பெண்ணுரிமை

* மதநல்லிணக்கம்

* பல்லுயிர் ஓம்புதல்

* பெரியார்

* அண்ணல் அம்பேத்கர்

* பெருந்தலைவர் காமராசர்

* பேரறிஞர் அண்ணா

* முத்தமிழறிஞர் கலைஞர்

* திராவிட மாடல் ஆட்சி

* தமிழ்நாடு அமைதிப் பூங்கா என்ற வார்த்தையும் கவர்னர் வாசிக்க மறுத்துள்ளார்.


Next Story